67,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

#SriLanka #rice
Dhushanthini K
5 hours ago
67,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

அரிசி இறக்குமதிக்காக அரசாங்கம் வழங்கிய காலப்பகுதியில் 67,000 மெற்றிக் தொன் அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. 

 சந்தையில் நிலவும் அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் நேற்று வரை அரிசியை இறக்குமதி செய்ய தனியார் மற்றும் அரச இறக்குமதியாளர்களுக்கு மட்டுமே அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது. 

 இதன் போது 67,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 28,500 மெற்றிக் தொன் கச்சா அரிசி எனவும் எஞ்சிய 38,500 மெற்றிக் தொன் நெல் அரிசி எனவும் சுங்கப் பேச்சாளர் தெரிவித்தார். 

 இதற்கிடையில், நுகர்வோர் அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் என்று கூறிக்கொண்டு சிறு அரிசி ஆலை உரிமையாளர்களிடம் சிலர் பணத்தை திருடுவதாக அம்பாறை பரகஹகலே பிரதேசத்தில் இருந்து தகவல் பதிவாகியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!