இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான சுங்கவரியை குறைக்குமாறு கோரிக்கை!
#SriLanka
#Tax
Thamilini
1 year ago
அரிசி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள குறைக்குமாறுநீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோவுக்கு 65 ரூபா வரியை குறைக்குமாறு பல பிரதேசங்களில் உள்ள வர்த்தகர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான வரி குறைக்கப்பட்டால் அரிசி கட்டுப்பாட்டு விலையிலேயே சந்தையில் நிலைத்திருக்கும் என வர்த்தகர்கள் போன்ற நுகர்வோர் அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
அரிசி இறக்குமதி அனுமதி வழங்கப்பட்ட டிசம்பர் 20 ஆம் திகதி வரை 67,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
இந்த அரிசி கையிருப்புகளுக்காக, ஒரு கிலோகிராம் ஒன்றுக்கு 65 ரூபா வீதம் 4.3 பில்லியன் ரூபாவை இறக்குமதி வரியாக இலங்கை சுங்கம் வசூலித்துள்ளது.