12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த கூகுள் நிறுவனம்

#google #LayOff #Workers
Prasu
3 months ago
12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த கூகுள் நிறுவனம்

கூகுள் நிறுவனத்தில் நிர்வாக ரீதியாக பணியாற்றி வரும் ஊழியர்களில் சுமார் 10 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். உலகளாவிய ரீதியில் முன்னணி நிறுவனமாக கூகுள் அறியப்படுகிறது. 

கொரேனா நோய்த் தொற்றுக்கு பின்னரான காலப்பகுதியில் கூகுள் நிறுவனத்தில் இருந்து ஊழியர் பணிநீக்கம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது கடந்த ஆண்டு சுமார் 12,000 பேர் ஊழியர்களை பணியிலிருந்து கூகுள் நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது கூகுளில் நிர்வாக ரீதியாக பல துறைகளில் இயக்குனர் மற்றும் துணைத் தலைவர் பொறுப்புகளில் உள்ள ஊழியர்களில் சுமார் 10 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 தங்கள் நிறுவன செயல்பாட்டை செம்மைப்படுத்தவும், செயல்திறனை மேம்படுத்தவும், தொழிநுட்ப துறையில் நிலவி வரும் சவால்களை சமாளிக்கவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!