கனடாவை தொடர்ந்து கிரீன்லாந்து பக்கம் பார்வையை திருப்பிய ட்ரம்ப் - பழைய திட்டங்கள் ஆய்வு!

அமெரிக்காவின் புதிய அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தற்போது கிரீன்லாந்தை வாங்குவதற்காக முன்னதாக முன்னெடுக்கப்பட்ட திட்டங்களை புதுப்பித்து வருவதாக கூறப்படுகிறது.
ஜனவரி 20 அன்று பதவியேற்பதற்கு முன்பே அவர் தன்னுடைய புதிய திட்டங்களை படிப்படியாக செயற்படுத்த ஆரம்பித்துள்ளார்.
டென்மார்க்கிற்கான தனது தூதரை நியமிக்கும் அறிவிப்பில், உலகம் முழுவதும் தேசிய பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தின் நோக்கங்களுக்காக, கிரீன்லாந்தின் உரிமையும் கட்டுப்பாடும் ஒரு முழுமையான தேவை என்று அமெரிக்கா உணர்கிறது என அறிவித்துள்ளார்.
அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களை இணைக்கும் நீர்வழிப் பாதையைப் பயன்படுத்துவதற்குத் தேவையான உயரும் கப்பல் செலவுகளைக் குறைக்க ஏதாவது செய்யாவிட்டால், பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டை அமெரிக்கா மீட்டெடுக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கனடாக அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக மாற வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார். இதற்கு கடுமையான எதிர்புகள் எழுந்திருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.



