இஸ்லாமிய அரசுக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டில் துருக்கியில் 16 பேர் கைது

இஸ்லாமிய அரசுக்கு (IS) நிதி திரட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு நான்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 16 சந்தேக நபர்களை துருக்கிய பொலிஸார் செவ்வாயன்று கைது செய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்கு நகரமான இஸ்மிரில் உள்ள தலைமை அரசு வழக்கறிஞர் அலுவலகம் நடத்திய விசாரணையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
வழக்கறிஞர்கள் 23 நபர்களுக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளனர். வாரண்டுகளைத் தொடர்ந்து, பொலிஸ் பிரிவுகள் இஸ்மிர், மெர்சின், அதானா மற்றும் மனிசா முழுவதும் 10 வணிகங்களைச் சோதனை செய்து, 16 சந்தேக நபர்களைக் கைது செய்து, 4,110 அமெரிக்க டொலர்கள், 7,205 யூரோக்கள், 434,650 துருக்கிய லிராக்கள், 40 கிராம் தங்கம் மற்றும் ஏராளமான டிஜிட்டல் பொருட்கள் ஆகியவற்றைக் கைப்பற்றியது.
மீதமுள்ள ஏழு சந்தேக நபர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.



