உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 20 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு
ஜோதிட ரீதியாக ஒருவனை கடன் காரனாக ஆக்கக்கூடிய சூழ்நிலையை அவனுடைய ஜாதக கிரக அமைப்புகள் ஏற்படுத்தி கொடுக்கின்றன .
ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்திற்கு ஆறாம் இடத்தை கொண்டு கடன் பிரச்சனையை பற்றி அறியலாம் . பொதுவாக பொருளாதார ரீதியாக கடன் படும் சூழ்நிலை ஒவ்வொருவருக்கும் உண்டு .
அந்த கடன் படும் சூழ்நிலை மேலும் - மேலும் - உயர்ந்து கொண்டே போவதற்கு காரணம் மனிதனின் பெயர் அமைப்பும் ஒரு காரணம் என்று சொல்லலாம் .
வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் கடன் பிரச்சனை இருந்தாலும் அந்த கடன் பிரச்சனை தீரும் சூழ்நிலை ஒரு கால கட்டத்தில் உருவாகி அதிலிருந்து விடுபட்டு அவன் நிம்மதியாக இருப்பான் .
ஆனால் அந்த கடன் பிரச்சனை தீராமல் மேலும் மேலும் கடன் வாங்கி அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் சூழ்நிலை ஒருவனுக்கு உருவாகிறது என்றால் அதற்க்கு காரணம் அவர்களுடைய பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் ஹீப்ரு பிரமிடு எண் இவற்றிக்கு நன்மை தரக்கூடிய வகையில் அவருடைய பெயரின் கூட்டு எண் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் சரியாக அமையவில்லை என்றே சொல்ல வேண்டும் .
ஒருவருடைய ஜாதகத்தில் அவருக்கு கடன் பிரச்சனை இருக்கும் என்ற கிரக அமைப்புகள் இருந்தாலும் அந்த கடன் சுமையை அதிகரிக்க செய்து தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுப்பது அவனுடைய பெயரின் கூட்டு எண் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் ஒரு காரணமாக அமையலாம் .