மஸ்ரூம் பெப்பர் மசாலா செய்முறை

#SriLanka
Dhushanthini K
12 hours ago
மஸ்ரூம் பெப்பர் மசாலா செய்முறை

சைவப்பிரியர்கள் சைவத்தை மட்டுமே விரும்பி சாப்பிடுவார்கள். அசைவம் சாப்பிட மாட்டார்கள். அதற்கு முக்கியமான காரணம் இன்னொரு உயிரை வதம் செய்து அதை சுவைக்க கூடாது என்பதுதான். ஆனால் சுவை என்று பார்க்கும்போது அசைவத்திற்கே அதிகப்படியாக இருக்கிறது. 

அதனால்தான் அசைவ சுவையில் சைவத்தை செய்து சாப்பிட வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவார்கள். அப்படி ஆசைப்படக்கூடிய ஒன்றாக திகழ்வதுதான் மட்டன் பெப்பர் மசாலா. இதன் சுவைக்கு இணையாக சைவத்திலும் நம்மால் செய்ய முடியும்.

தேவையான பொருட்கள்

 வெங்காயம் – 2 

தக்காசெய்முறைளி – 2 

மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் 

மல்லித்தூள் – ஒரு ஸ்பூன் 

மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன் 

கருவேப்பிலை – ஒரு கொத்து 

காளான் – ஒரு கப்

 உப்பு - தேவையான அளவு 

மிளகுத்தூள் –  ஒரு டீஸ்பூன் 

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

 இஞ்சி பூண்டு பேஸ்ட்  - ஒரு டேபிள் ஸ்பூன் 

தண்ணீர் -1/4 கப்

செய்முறை

முதலில் காளானை சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணையை ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை அதில் போட்டு வதக்க வேண்டும். வெங்காயம் லேசாக சிவந்த பிறகு இதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை போட்டு அதன் பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும்.

பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளியையும் சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி மசிய ஆரம்பிக்கும் பொழுது இதற்கு தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய் தூள் போன்றவற்றையும் சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி மசாலாவின் பச்சை வாடை போகும் வரை நன்றாக கொதிக்க விடுங்கள். பிறகு இதில் கருவேப்பிலையையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். 

பிறகு இதில் நாம் நறுக்கி சுத்தம் செய்து வைத்திருக்கும் காளானை சேர்த்து காளானில் மசாலா அனைத்தும் சேரும்படி நன்றாக கிளறி விட வேண்டும். பத்து நிமிடம் போதும் காளான் நன்றாக வெந்துவிடும். பிறகு இதில் கடைசியாக மிளகுத்தூளை சேர்த்து ஒரு முறை பிரட்டி விட்டு அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். 

அவ்வளவுதான் சுவையான காளான் பெப்பர் மசாலா தயாராகிவிட்டது. குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கக்கூடிய பேச்சுலர்கள் அனைவருமே இந்த எளிமையான காளான் பெப்பர் மசாலாவை மிகவும் எளிமையான முறையில் இப்படி செய்து சாப்பிடலாம். 

இதையும் படிக்கலாமே:நெல்லிக்காய் ரசம் செய்முறை அசைவத்திற்கு இணையான சுவையில் சைவத்தையும் நம்மால் சமைக்க முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக தான் இந்த காளான் பெப்பர் மசாலா திகழ்கிறது. விருப்பம் இருப்பவர்கள் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். அதன் சுவையில் மெய் மறந்து போவீர்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!