பாகிஸ்தானில் மே 9 வன்முறை தொடர்பில் 60 பேருக்கு சிறை தண்டனை

#Prison #Pakistan #HighCourt #Riots
Prasu
3 months ago
பாகிஸ்தானில் மே 9 வன்முறை தொடர்பில் 60 பேருக்கு சிறை தண்டனை

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மே 9-ம் தேதி அவரது ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. 

ராணுவ நிலைகள் மற்றும் ராணுவ தலைமையகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பான வழக்குகளை விசாரித்த ராணுவ கோர்ட்டுகள், சுப்ரீம் கோர்ட்டு அனுமதியைத் தொடர்ந்து தீர்ப்பு வழங்குகின்றன. 

கடந்த வாரம் 25 பேருக்கு இரண்டு ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில், மேலும் 60 பேருக்கு 2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

தண்டனை பெற்றவர்களில் இம்ரான் கானின் உறவினர் ஹசன் கான் நியாசியும் ஒருவர். லாகூர் படைப்பிரிவு தளபதியின் ஜின்னா இல்லம் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

 இத்துடன் மே 9 வன்முறை தொடர்பான வழக்குகளின் விசாரணை நிறைவு பெற்றுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!