கொழும்பு நகரப் பகுதியில் குப்பைகள் அதிகரிப்பு!

#SriLanka
Thamilini
1 year ago
கொழும்பு நகரப் பகுதியில் குப்பைகள் அதிகரிப்பு!

திருவிழாக் காலங்களில் கொழும்பு நகரப் பகுதியில் குப்பைகள் அகற்றப்படுவது அதிகரித்துள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. 

 நாளாந்தம் 450 தொன் குப்பைகள் அகற்றப்படுவது இம்மாத இறுதிக்குள் 500 தொன்களாக அதிகரிக்கும் என அதன் மாநகர ஆணையாளர்  பாலித நாணயக்கார தெரிவித்தார். 

 மேலும் கருத்து தெரிவித்த திரு பாலித நாணயக்கார, “பண்டிகைக் காலம் என்பதால், நமது சராசரி குப்பை உற்பத்தி ஓரளவுக்கு அதிகரித்துள்ளது.

பொதுவாக, நகரில் தினசரி குப்பை உற்பத்தி 420 முதல் 450 டன் வரை நீடித்து வருகிறது. ஆனால், டிசம்பர் 31ஆம் திகதிக்குள், கொழும்பிற்கு அதிக எண்ணிக்கையில் மக்கள் வருவதால், இந்த அளவு குப்பைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

 இதேவேளை, அதிகளவிலான உணவுப்பொருட்கள் தூக்கி எறியப்படுவதால், அழுகும் குப்பைகளின் அளவு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!