கடந்த 24 மணிநேரத்தில் 383 சாரதிகளை மடக்கி பிடித்த பொலிஸார்!
இலங்கை பொலிஸாரின் விசேட நடவடிக்கையின் கீழ் இன்று (28) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையில் 383 சாரதிகள் பிடிப்பட்டுள்ளனர்.
மதுபோதையில் வாகனம் செலுத்திய குறித்த சாரதிகளுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த காலப்பகுதியில் 8,392 சாரதிகளுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறிய 1382 சாரதிகளுக்கும், உரிமத்தை மீறிய 690 சாரதிகளுக்கும், அதிவேகமாக வாகனம் ஓட்டிய 98 சாரதிகளுக்கும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய 59 சாரதிகளுக்கும் எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்களை குறைப்பதற்காக பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக கடந்த 23ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கையொன்று அமுல்படுத்தப்பட்டது.