30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய ஏற்பாடு!

#SriLanka #Salt
Dhushanthini K
14 hours ago
30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய ஏற்பாடு!

இலங்கையில் அண்மைக்காலமாக நிலவும் உப்பு தட்டுப்பாடு தொடர்பில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள உப்பு நிறுவனத் தலைவர் டி. திரு.நந்தன திலக மக்களிடம் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். 

ஒரு மாதத்திற்கு சராசரியாக ஒரு குடும்பத்திற்கு 400 கிராம் உப்பு தூள் மற்றும் 1 கிலோ க்யூப் உப்பு கொண்ட 2 பாக்கெட்டுகள் போதுமானது.

 இருப்பினும், உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றும், தேவையற்ற அச்சம் காரணமாக உப்பு பதுக்கி வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

லங்கா ஹம்பாந்தோட்டை உப்பு நிறுவனத்திடம் தற்போது 6000 மெற்றிக் தொன் உப்பு இருப்பதாகவும், அது ஜனவரி மாதம் வரை போதுமானது என்றும் அவர் கூறினார்.

உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற சந்தேகம் காரணமாக வெளிநாடுகளில் இருந்து 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!