விமான விபத்து குறித்து மன்னிப்பு கோரிய ரஷ்ய ஜனாதிபதி புடின்

#Flight #Accident #Russia #Putin #President #Azerbaijan
Prasu
3 months ago
விமான விபத்து குறித்து மன்னிப்பு கோரிய ரஷ்ய ஜனாதிபதி புடின்

அஜர்பைஜான் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளாகி 38 பேர் உயிரிழந்தது துயரமான சம்பவம் என அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் இடம் ரஷிய அதிபர் புதன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

துயரமான சம்பவம் ரஷியாவின் வான் பகுதிக்குள் நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவாக குணமடை பிரார்த்திக்கிறேன் என அஜர்பைஜான் அதிபரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை ரஷிய அதிபர் புதின் மாளிகை வெளியிட்டுள்ளது. மேலும் அத்துடன் "விமான விபத்து ஏற்பட்ட நேரத்தில் கிரோஸ்னி, மொஸ்டோக், விளாடிகாவ்காஸ் ஆகியவற்றின் மீது உக்ரைனின் டிரோன்கள் தாக்குதல் நடத்தியது. 

இதற்கு ரஷியாவின் வான் பாதுகாப்பு சிஸ்டம் பதிலடி தாக்குதல் நடத்தியது" எனத் தெரிவித்துள்ளது. அஜர்பைஜான் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான J2-8243 விமானம் கிரோஸ்னியில் தரையிறங்க இருந்த நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது.

 மோசமான வானிலை காரணமாக அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் கஜகஸ்தானில் உள்ள அக்டாவில் தரையிறங்க விமான வேண்டுகோள் விடுத்து தரையிறக்க முயற்சித்தபோது தரையில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 38 பேர் உயிரிழந்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!