தென் கொரியாவில் 181 பேருடன் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது : 28 பேர் உயிரிழப்பு!
#SriLanka
#SouthKorea
Dhushanthini K
16 hours ago
தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் 181 பேருடன் சென்ற விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகி விமான நிலையத்தில் உள்ள சுவரில் மோதியதாக ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
விபத்தின் போது, பயணிகள் விமானத்தில் 175 பயணிகளும், 6 விமான பணிப்பெண்களும் இருந்தனர். தாய்லாந்தில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த விமானம், தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.
மீட்புப் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாக கொரிய ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.