தபால் ரயிலில் மோதி ஒருவர் பலி!
#SriLanka
#Accident
Dhushanthini K
1 day ago
மருதானையில் இருந்து காலி நோக்கி பயணித்த இரவு நேர தபால் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அம்பலாங்கொட தர்மசோக வித்தியால மாவத்தையில் உள்ள புகையிரத கேட்டிற்கு அருகில் நேற்றிரவு குறித்த நபர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர். உயிரிழந்தவரின் மனைவி முன்னர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் அதன் காரணமாகவே அவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.