பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெண் ஒருவர் கைது!

#SriLanka
Dhushanthini K
2 days ago
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெண் ஒருவர் கைது!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று கொக்கேய்னுடன் இலங்கைக்கு வந்த பெண் ஒருவரை கைது செய்துள்ளது. 

 குறித்த பெண் கானாவில் இருந்து வந்தவர் எனவும் அவர் தென்னாபிரிக்க கடவுச்சீட்டுடன் இன்று (29.12) அதிகாலை 1.50 மணியளவில் கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் இந்த நாட்டிற்கு வந்துள்ளார். 

 41 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். அவளிடம் இருந்த சுமார் 4068 கிராம் கொக்கைன் போதைப்பொருளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 

 இதன் பெறுமதி 142 மில்லியன் ரூபா என சுங்க ஊடகப் பேச்சாளர் பிரதி சுங்கப் பணிப்பாளர் திரு.சிவலி அருக்கொட தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!