மலேசியாவில் இடம்பெற்ற அழகுராணி போட்டி : குற்றச்சாட்டுக்களை மறுக்கும் நிறுவனம்!
#SriLanka
#Malasia
Dhushanthini K
2 days ago
மலேசியாவில்MK Asia Production Entertainment நிறுவனம் அண்மையில் நடத்திய அழகுராணி போட்டியில் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி முரளி கண்ணன் மறுத்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், அழகு ராணி போட்டியில் மிகப்பெரிய தில்லுமுல்லுகள் இடம் பெற்றதாக பெண்மணி முன் வைத்த குற்றச்சாட்டு பெரும் வேதனையை அளிக்கிறது.
அழகு ராணி போட்டியில் கடைபிடிக்கப்படும் விதிமுறைகள் குறித்தும் அதற்கு அவர்கள் தகுதியானவர்களான என்பது குறித்தும் போட்டியாளர்களுடன் முறையான ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும்.
மேலும் அவர்களுக்கு அழகும் ராணி போட்டியில் பங்கேற்பதற்குரிய பயிற்சிகளும் வழங்கப்படும். திறமைகளின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.