தாயின் வலி நிவாரணி மருந்தை அருந்திய குழந்தை பலி!
வலிநிவாரணி மருந்தை உட்கொண்ட குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் புத்தளம் பகுதியில் பதிவாகியுள்ளது.
புத்தளம் கலடிய பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு வயது ஏழு மாத வயதுடைய மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் இளைய பிள்ளையான எஸ்.ஏ.வினுக மண்டித் என்பவர் உயிரிழந்துள்ளார்.
மூன்று பிள்ளைகளையும் உறவினர் வீட்டுக்குச் செல்ல பெற்றோர்கள் தயார்படுத்திக் கொண்டிருந்த வேளையில், யாருக்கும் தெரியாமல் உயரமான இடத்தில் வைக்கப்பட்டிருந்த தாயின் வலிநிவாரணி மருந்தை சிறு குழந்தை குடித்தமையால் மேற்படி அனர்த்தம் நேர்ந்துள்ளது.
குழந்தையை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர் வைத்தியர்களின் பரிந்துரையின்பேரில் வேறு மருத்துமனைக்கு கொண்டுச்சென்றுள்ளனர்.
இவ்வாறாக சுமார் மூன்று மருத்துமனைகள் மாற்றப்பட்ட நிலையில் கொழும்பில் உள்ள சிறுவர் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னர் குழந்தையின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.