இலங்கையில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு!
#SriLanka
#Vegetable
Thamilini
1 year ago
பல பிரதேசங்களின் பொருளாதார மத்திய நிலையங்களில் கடந்த வாரத்தை விட மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (29) ஒரு கிலோ பீன்ஸ் மொத்த விற்பனை விலை 350 முதல் 400 ரூபா வரையிலும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 800 முதல் 900 ரூபா வரையிலும் விலை அதிகரித்துள்ளது.
இது தவிர கேரட், வெண்டைக்காய், தக்காளி உள்ளிட்ட பல வகையான காய்கறிகளின் விலையும் ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளது.
இதேவேளை, கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய நிலவரப்படி உள்ளூர் சந்தையில் மலையகம் மற்றும் கீழ்நில மரக்கறி விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.