வியாபார மாஃபியாவாக உருவெடுத்துள்ள தனியார் கல்வி நிறுவனங்கள்! எழுந்த குற்றச்சாட்டு
#SriLanka
Mayoorikka
2 months ago

இலங்கையில் தனியார் கல்வி நிறுவனங்கள் புதிய வியாபார மாஃபியாவாக உருவெடுத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “பெற்றோர்கள் தாம் உழைக்கும் பணத்தில் நூற்றுக்கு 60 சதவீதத்தை மாணவர்களின் கல்விக்காக செலவழிக்கின்றனர்.
தனியார் வகுப்புக்கள் அந்தளவு புதிய வியாபராமாக உருவெடுத்துள்ளது.
எனினும், தனியார் வகுப்புகளின் துணை இல்லாமல் பாடசாலை கல்வியை மாத்திரம் வைத்து மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை எடுக்க முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு வர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.



