18 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளின் சேவிங் கணக்குகளுக்கு வரி விதிக்கப்படுமா?
#SriLanka
Thamilini
1 year ago
குழந்தையின் மாதாந்த வருமானம் 150,000 ரூபாவிற்கும் குறைவாக இருந்தால், சிறுவர் சேமிப்புக் கணக்குகளில் இருந்து வட்டிக்கு வரி அறவிடப்பட மாட்டாது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளார்.
18 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சேமிப்புக் கணக்குகளில் இருந்து வட்டிக்கு 10% வரி பிடித்தம் செய்வது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மாதாந்த வருமானம் 150,000 ரூபாய்க்கு மேல் உள்ள சிறுவர் கணக்குகளுக்கு மட்டுமே வரி விதிக்கப்படும் என்றும் அந்த வருமானத்தில் வட்டித் தொகையும் சேர்க்கப்பட்டால் மட்டுமே வரி விதிக்கப்படும் என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.