வவுனியாவில் பேருந்தின் சக்கரத்தில் சிக்குண்டு உயிரிழந்த குழந்தை!
ஏழு வயது குழந்தையொன்று பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளது.
வவுனியா, பாவக்குளம் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துவிச்சக்கரவண்டியில் நண்பர்கள் குழுவுடன் பயணித்த குழந்தையின் துவிச்சக்கர வண்டி பஸ்ஸுடன் மோதியதாகவும், அதன்பின் பின் சக்கரத்தில் குழந்தை சிக்குண்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் படுகாயமடைந்த குழந்தை வவுனியா செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அப்துல் மஜீத் உமர் என்ற 07 வயது குழந்தையே விபத்தில் உயிரிழந்துள்ளது. உயிரிழந்த குழந்தையின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை வவுனியா செட்டிகுளம் வைத்தியசாலை பிரேத அறையில் நடைபெறவுள்ளது.
விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.