ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை ரத்து செய்யப்படுமா? பிரதமர் ஹரிணி வெளியிட்ட தகவல்

#SriLanka
Mayoorikka
2 days ago
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை ரத்து செய்யப்படுமா? பிரதமர் ஹரிணி வெளியிட்ட தகவல்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் இரத்து செய்யப்பட வேண்டுமானால், பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை மூட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

 அலரி மாளிகையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மாகாண கல்வித் தலைவர்களைச் சந்தித்து நாட்டின் எதிர்கால கல்வித் திட்டங்கள் குறித்து நேற்று கலந்துரையாடினார்.

 தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், ஐந்தாம் தர புலமைப்பரிசிலை இரத்து செய்யுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அது பிள்ளைகளுக்கு மன உளைச்சல் என்கிறார்கள். ஐந்தாம் தர புலமைப்பரிசில் இரத்து செய்யப்பட வேண்டுமானால், பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை மூட வேண்டும். 

 பிரச்சினைக்கு தீர்வை வழங்காமல் சட்ட ரீதியாகவோ அல்லது கொள்கை ரீதியாகவோ மட்டும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டால் நாட்டில் நெருக்கடிகள் ஏற்படலாம். இவ்வாறான நிலைமைகளைக் குறைக்கும் வகையில் பொதுப் பரீட்சை முறையின் கீழ் பரீட்சையை எதிர்கொள்ளும் பிள்ளைகளுக்கு பொதுவான கல்வி முறை இருக்க வேண்டும்.

 முடிவெடுக்கும் பொறிமுறையை வலுப்படுத்த முயற்சிக்கிறோம். இது அரசியல்வாதியோ, அமைச்சரோ அல்லது செயலாளரோ தனிப்பட்ட முடிவுகளை எடுப்பதற்காக அல்ல, தரவுகளின் அடிப்படையில் முடிவெடுக்கும் பொறிமுறையை அமைக்க முயற்சிக்கிறோம். என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!