லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!
#SriLanka
#Litro Gas
Thamilini
1 year ago
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், உள்நாட்டு எரிவாயு விலையை அதிகரிப்பதில்லை என லிட்ரோ நிறுவனம் ஜனவரி மாதம் தீர்மானித்துள்ளதாக Litro Gas Lanka நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே, 2025 ஜனவரி மாதத்துடன் தொடர்புடைய தற்போதைய விலைகள் செல்லுபடியாகும்.
இதற்கமைய 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாவாகவும், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1,482 ரூபாவாகவும், 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 694 ரூபாவாகவும் உள்ளது.