நீதிக்காக காத்திருக்கும் தமிழ் மக்கள் : கனடாவின் பழமைவாத கட்சியின் தலைவர்!
கனடாவின் பழமைவாதக் கட்சியின் தலைவரான Pierre Poilievre, புத்தாண்டு தமிழ் பாரம்பரிய மாதத்தை அங்கீகரித்து, தமிழ் இனப்படுகொலைக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான தனது கட்சியின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் அறிக்கையை வெளியிட்டார்.
Poilievre இன் அறிக்கையானது தமிழ் இனப்படுகொலையை வெளிப்படையாக அங்கீகரித்ததுடன், தமிழ் கலாச்சாரம் எப்போதும் மதிக்கப்படுவதில்லை என்ற அவரது வருத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.
"துரதிர்ஷ்டவசமாக, இந்த மாதத்தில் நாம் கொண்டாடும் நம்பமுடியாத கலாச்சாரத்திற்கு எப்போதும் மரியாதை கொடுக்கப்படவில்லை.
இது தமிழ் இனப்படுகொலையின் கொடூரமான நிகழ்வுகளில் வெளிப்படையாகத் தெரிந்தது - பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் நீதிக்காக காத்திருக்கிறார்கள்.
மொழி, இசை, கலைகள் மற்றும் உணவு வகைகள் மூலம் வெளிப்படுத்தப்படும் அவர்களின் பண்டைய கலாச்சாரத்தின் அதிர்வுகளைக் குறிப்பிட்டு, தமிழர்களின் ஆழமான கலாச்சார பங்களிப்புகளை அவரது அறிக்கை மேலும் எடுத்துக்காட்டுகிறமை குறிப்பிடத்தக்கது.