புஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகளுக்கு தடை செய்யப்பட்ட பொருட்களை வழங்கிய அதிகாரிகள்!
#SriLanka
Dhushanthini K
2 days ago
புஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு தடை செய்யப்பட்ட பொருட்களை வழங்கிய குற்றச்சாட்டில் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, சிறைச்சாலையில் உள்ள சில கைதிகளுக்கு விசேட வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக கைதிகளின் உரிமைகள் பாதுகாப்பு குழுவினால் நேற்று முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு மற்றும் சந்தேகநபர்களின் கைகளில் இரும்புச் சங்கிலியில் கைவிலங்குகள் போடப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டமை தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டார்.