ஜெனிவா பொறுப்புக்கூறல் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க விசேட இராஜதந்திர குழு!

#SriLanka
Mayoorikka
1 day ago
ஜெனிவா பொறுப்புக்கூறல் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க விசேட இராஜதந்திர குழு!

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில், விசேட இராஜதந்திர குழு ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன், 58ஆவது அமர்வுக்கு முன்னர் சிறப்பறிக்கையை வெளியிடவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், மனித உரிமை பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்கப்படும் எந்த தீர்மானத்தின் 51/1 நகல்வடிவையும் இலங்கை தொடர்ந்து எதிர்க்கும்.

 இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிக்கும் வெளிப்புற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் எந்த தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இறுதி அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தின் நகல்வடிவை நிராகரிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

 எனினும் உள்நாட்டு பொறிமுறை மூலம் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வினை காண்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. ஆனால் ஜெனிவா தீர்மானத்தில் உள்ள பல விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

 எவ்வாறாயினும் பொறுப்புக்கூறும் விடயத்தை பிரதிபலிக்கக்கூடிய நேர்மையான அறிக்கையை கூடிய விரைவில் அரசாங்கம் முன்வைக்க உள்ளது. இந்த அறிக்கையானது ஜெனிவாவுக்கு பதிலளிப்பதாக அல்லாது எமது அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்துவதாகவே இருக்கும்.

 குறிப்பாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையை பிரதிபலிக்கும் வகையிலேயே எமது சிறப்பறிக்கை அமையும். இதற்காக இலங்கையின் விசேட இராஜதந்திர குழு செயற்படுவதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!