8 மில்லிமீற்றர் கைத்துப்பாக்கி மற்றும் உயிருள்ள தோட்டாக்களுடன் இருவர் கைது!
செனிகம பிரதேசத்தில் நாட்டில் தயாரிக்கப்பட்ட 8 மில்லிமீற்றர் கைத்துப்பாக்கி மற்றும் உயிருள்ள தோட்டாக்கள் என்பவற்றுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் பணிப்பாளரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (04) குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து 9 மில்லிமீற்றர் துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 50க்கும் மேற்பட்ட தோட்டாக்கள், 02 கைக்குண்டுகள் மற்றும் T-56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 80க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் ஆகியவற்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இதேவேளை, இவ்வாறான சட்டவிரோத துப்பாக்கிகள் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் புலனாய்வு மற்றும் படையெடுப்பு நிலைய கட்டளைத் தளபதியின் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
இதன்படி, போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் புலனாய்வு மற்றும் படையெடுப்பு நிலைய கட்டளைத் தளபதியை 071 8596476 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும் என பொலிஸார் தெரிவித்தனர்.