இயற்கை அனர்த்தங்களை தொடர்ந்து விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு சிக்கல்!

#SriLanka #Farmers
Dhushanthini K
1 day ago
இயற்கை அனர்த்தங்களை தொடர்ந்து விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு சிக்கல்!

கடந்த காலங்களில் இயற்கை அனர்த்தங்கள் உட்பட பல நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகள் இன்று மற்றுமொரு அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 

 இனந்தெரியாத புழு இனத்தினால் பல பிரதேசங்களில் நெற்பயிர்ச் செய்கை சேதப்படுத்தப்பட்டுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. 

 அநுராதபுரம் மாவட்டத்தில் அநுராதபுரம், ஓயாமடுவ, விளாச்சியா போன்ற பிரதேசங்களில் இந்த புழுத் தொல்லையால் வயல்வெளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 

 பல்வேறு பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தினாலும் புழுக்களின் தொல்லையை கட்டுப்படுத்த முடியவில்லை என விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர். 

 மேலும் புழுக்களின் தொல்லையால் விளைச்சல் வேகமாக குறையும் அபாயம் உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

 இந்த புழு தொல்லையை தடுக்க, சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், மற்ற பகுதிகளுக்கும் பரவும் அபாயம் உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!