அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழகத்தில் கையெழுத்து போராட்டம்!

#SriLanka
Mayoorikka
1 day ago
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழகத்தில் கையெழுத்து போராட்டம்!

நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 அந்தவகையில் இன்றையதினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு முன்பாகவும் இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 பாேராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றுள்ளது. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் நீதி மன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட பின்பும் மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும் புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி குறித்த கையெழுத்துப் போராட்டம் முன்னெடக்கப்பட்டுள்ளது.

 இதில் மத தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர் மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் கையெழுத்திட்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!