சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்!

#SriLanka
Dhushanthini K
1 day ago
சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்!

 ஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபருக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (06.01)  ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. 

 சட்டத்தை அமுல்படுத்துவதற்காக செயற்படும் அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். 

 நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பாகும் எனவும், அரசியல் அதிகாரம் தொடர்பில் மக்களின் அபிப்பிராயங்களை மாற்றி நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் எனவும், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு இடமளிக்கக் கூடாது எனவும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

அத்துடன், மக்களின் எதிர்பார்ப்புகளை சிதைக்கும் வகையில் அரசாங்கம் செயற்படாது என்றும், மக்களின் மனதில் உடைந்து போன நீதியை மீட்டெடுக்க அரசாங்கம் செயற்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். 

 நீதி அமைச்சர் மற்றும் தேசிய ஒருமைப்பாடு சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி சேனவிரத்ன மற்றும் சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!