வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் இனி பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்களை இலகுவாக பெறலாம்!

#SriLanka
Dhushanthini K
1 day ago
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் இனி பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்களை இலகுவாக பெறலாம்!

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை தாமதமின்றி அந்தந்த நாடுகளின் தூதரகங்கள் மூலம் பெற்றுக்கொள்ளும் வகையில் டிஜிட்டல் வசதிகள் இன்று (06) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

 ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் டிஜிட்டல் மயமாக்கல் நிகழ்ச்சி நிரலின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்தின் பிரகாரம் அது அமைந்துள்ளது. 

 இதன்படி, 07 தூதரகங்களுக்கு இந்த முன்னோடித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், ஜப்பான், கத்தார், குவைத், மிலன், ரொறன்ரோ, மெல்பேர்ன் மற்றும் துபாய் ஆகிய நாடுகளின் துணைத் தூதரகங்கள் அந்த நாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு பிறப்புச் சான்றிதழ்கள், திருமணச் சான்றிதழ்கள் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை தாமதமின்றி பெற்றுக் கொள்ள உதவும்.

 எதிர்வரும் காலங்களில் அனைத்து தூதரகங்களையும் உள்ளடக்கிய வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார். 

 அதன்படி, இது தொடர்பான இணையத்தளம் அமைச்சர் விஜித ஹேரத்தால் இன்று திறந்து வைக்கப்பட்டது. 

 வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் அந்தந்த நாடுகளின் அந்தந்த தூதரகங்களுக்குச் சென்று அது தொடர்பான சேவைகளை தாமதமின்றி மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!