விளையாட்டுதுறையின் வளர்ச்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க தயாராகும் இந்தியா!

#SriLanka
Dhushanthini K
1 day ago
விளையாட்டுதுறையின் வளர்ச்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க தயாராகும் இந்தியா!

விளையாட்டு வளர்ச்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க இந்தியா தயாராக இருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். 

 விளையாட்டுத்துறை அமைச்சில் இன்று (06.01) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

 கிரிக்கெட் மற்றும் பிற விளையாட்டு நடவடிக்கைகளின் வளர்ச்சிக்காக நாடு முழுவதும் விளையாட்டு மேம்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஆதரவு வழங்கப்படும் என உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். 

 மேலும், இளைஞர் விவகாரத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த தாம் நம்புவதாகவும், அதற்காக இந்திய இளைஞர் விவகாரப் பிரிவுக்கு வருகை தருமாறு இந்நாட்டின் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!