அரிசி பற்றாக்குறை : நெல் கொள்முதலை தொடங்க திட்டமிடும் அரசாங்கம்!
#SriLanka
#rice
Dhushanthini K
1 day ago
ஜனவரி 3வது வாரத்தில் இருந்து நெல் கொள்முதலை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
மூன்று இலட்சம் பெறுமதியான நெல்லை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளதாக நெல் கொள்வனவு மற்றும் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்லந்த தெரிவித்தார்.
நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் அதற்கான ஏற்பாடுகள் ஏராளமாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதற்கான நிதி மிக விரைவில் ஒதுக்கப்படும் என்றார்.
பெறப்படும் அரிசி அரச கையிருப்பாக வைக்கப்படும் எனவும், சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் போது மாத்திரம் அவை விடுவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.