கண் சத்திரசிகிச்சையினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை!
#SriLanka
#NuwaraEliya
#compensation
Thamilini
1 year ago
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக்கு உள்ளான பல நோயாளர்களின் பார்வை இழந்தமைக்காக வழங்கப்பட வேண்டிய நட்டஈடு தொகை தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பான சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட 17 நோயாளர்களுக்கு பின்வரும் நட்டஈட்டை வழங்குவதற்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12 நோயாளிகளுக்கு தலா ரூ.1,000,000/- இழப்பீடு.
02 நோயாளர்களுக்கு தலா ரூ.750,000/- இழப்பீடு.
ஒரு நோயாளிக்கு ரூ.700,000/- இழப்பீடு வழங்குதல்.
02 நோயாளர்களுக்கு தலா ரூ.250,000/- இழப்பீடு. வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.