சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி இடம்பெறும் பாரிய மோசடி : மக்களின் கவனத்திற்கு!
#SriLanka
#Social Media
#Fraud
Thamilini
1 year ago
சமூக வலைத்தளங்கள் மூலம் அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகளுக்கு உங்களின் தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
வறிய குடும்பங்களுக்கு ஜனாதிபதி 50,000 ரூபா நிதியுதவி வழங்கவுள்ளதாக சமூக ஊடகங்களில் போலியான குறுஞ்செய்திகள் வெளியிடப்படுவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, இது தொடர்பான குறுஞ்செய்திகளுக்கு தமது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் திருமதி மேனகா பத்திரன தெரிவித்துள்ளார்.