அனுரவின் அழைப்பை ஏற்று இலங்கை வரும் இந்திய பிரதமர்!

#SriLanka #NarendraModi
Dhushanthini K
21 hours ago
அனுரவின் அழைப்பை ஏற்று இலங்கை வரும் இந்திய பிரதமர்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த வருடம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். 

 கொழும்பில்  நேற்று (07.01) பிற்பகல் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இதனைத் தெரிவித்தார். 

 கடந்த டிசம்பரில் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பை ஏற்று, அதற்கு பொருத்தமான நேரத்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடனான உறவின் ஊடாக இலங்கையின் நிதி நிலைப்படுத்தல் முயற்சிகளில் இந்தியா தொடர்ந்து ஈடுபடும் என்று தெரிவித்த அவர், இலங்கைக்கு இந்தியா கடனாக வழங்கிய 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் மானியமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!