வேலை நிறுத்தத்தை கைவிட்ட பஸ் சங்கங்கள்!

#SriLanka #strike #Bus
Dhushanthini K
17 hours ago
வேலை நிறுத்தத்தை கைவிட்ட பஸ் சங்கங்கள்!

Clean Sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் போக்குவரத்து நடவடிக்கைகள் தொடர்பில் தனியார் பஸ் சங்கங்களுக்கும் பதில் பொலிஸ் மா அதிபருக்கும் இடையில் இன்று (08) இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன. 

 இதன்படி, நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்வதில்லை என பஸ் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. 

 பொலிஸாரின் வரம்பு மீறல் மற்றும் தேவையற்ற அழுத்தங்களை பஸ்கள் மீது பிரயோகிப்பதை கண்டித்து நாடு தழுவிய ரீதியில் இந்த வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க பஸ் சங்கங்கள் நேற்று இணக்கம் தெரிவித்திருந்தன. 

 இவ்வாறானதொரு பின்னணியில் இன்று காலை பொலிஸ் தலைமையகத்தில் பதில் பொலிஸ் மா அதிபர் திரு.பிரியந்த வீரசூரியவுடன் பஸ் சங்கப் பிரதிநிதிகள் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர். 

இதன்போது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!