பாணந்துறையில் பிரபல ஹோட்டலில் கொள்வனவு செய்யப்பட்ட ரொட்டியில் இனங்காணப்பட்ட உலோக துண்டுகள்!

#SriLanka
Dhushanthini K
16 hours ago
பாணந்துறையில் பிரபல ஹோட்டலில் கொள்வனவு செய்யப்பட்ட ரொட்டியில் இனங்காணப்பட்ட உலோக துண்டுகள்!

பாணந்துறையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மீன் ரொட்டியில் லைட்டரின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

 பாணந்துறை அருக்கொட பிரதேசத்தை சேர்ந்த  மஞ்சுள பெரேரா என்பவர் இன்று (08) காலை தனது இரண்டு மகன்களுக்கும் கொடுப்பதற்காக இரண்டு மீன் ரொட்டிகளை ஹோட்டலில் இருந்து கொள்வனவு செய்துள்ளார். 

 அங்கு அவரது இளைய மகன் சாப்பிட்ட மீன் ரொட்டியில் லைட்டரின் உலோகப் பகுதி காணப்பட்டது. அவ்வேளையில் திரு.மஞ்சுள பெரேரா இது தொடர்பில் பிரதேசத்திற்குப் பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவித்த போதும், இன்று விடுமுறையில் இருப்பதாகவும் பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு தனது பிரச்சினையை தெரிவிக்குமாறும் தெரிவித்தார். 

 பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குச் சென்று அவர் இதனைக் கூறியபோதும் தனது முறைப்பாட்டை ஏற்காமல் திருப்பி அனுப்பியதாக  மஞ்சுள தெரிவித்தார். 

 மேலும், இந்த ஹோட்டல் பாணந்துறை மாநகர சபை எல்லைக்குள் இருப்பதாகவும், எனவே இது தொடர்பில் மாநகர சபையுடன் இணைக்கப்பட்டுள்ள பொது சுகாதார பரிசோதகரிடம் தெரிவிக்குமாறும் அதிகாரிகள் அவரிடம் தெரிவித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!