வாய்க்கு ருசியான பிரைட் ரைஸ் - எப்படி செய்வது?
#Food
#Swiss
Prasu
18 hours ago
வணக்கம் Lanka4 நேயர்களே! மீண்டும் ஒரு சமையல் குறிப்பு.
AMMAS உணவகத்தில் செய்யப்பட்ட பிரைட் ரைஸ்.பார்வைக்கு பிரியாணி போல் இருக்கும் ஆனால் இது முற்றிலும் சுவையான பிரைட் ரைஸ்.
AMMAS
உணவகத்தில் பிரைட் ரைஸ் மட்டுமன்றி பிரியாண, பல வகையான கொத்துரொட்டி,
இனிப்புவகை கேக் போன்ற உணவுகளுடன் 100 பேர்களுடன் நிகழ்ச்சிகளை இசை
நிகழ்ச்சிகளுடன் கொண்டாட முடியும்.
பிரைட் ரைஸ் செய்ய தேவையான பொருட்கள் :
- பாசுமதி அரிசி
- வெங்காயம்
- கேரட்
- பீன்ஸ்
- பன்னீர்
- பச்சை பட்டாணி
- வெங்காயத்தாள்
- குடை மிளகாய்
- இஞ்சி பூண்டு விழுது
- முட்டை
- சில்லி சாஸ்
- சோயா சாஸ்
- மிளகு தூள்
- நெய்
- உப்பு
- வெங்காயத்தை நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும். கேரட், பீன்ஸ், குடை மிளகாய், பன்னீர், வெங்காயத் தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும். பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
- சாதம் உதிர் உதிரக வடித்து ஆற வைத்து கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றி முட்டையை உடைத்து ஊற்றி சிறிது உப்பு சேர்த்து பொரித்து கொள்ளவும்.
- ஒரு வாணலியில் நெய் ஊற்றி அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
- அடுத்து அதில் பாதி வெங்காயத் தாளை சேர்த்து வதக்கி பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- அதன் பின் கேரட், பீன்ஸ், பன்னீர், பச்சை பட்டாணி சேர்த்து கலர் மாறாமல் வதக்கவும். அடுத்து அதில் குடை மிளகாயை போட்டு வதக்கவும்.
- அனைத்து வெந்ததும் அதில் உப்பு, சோயா சாஸ், சில்லி சாஸ், மிளகு தூள் சேர்த்து நன்றாக வதக்கவும் மூடி வைத்து வேக வைக்கவும்.
- காய்கறி நன்றாக வெந்த பின் ஆற வைத்த சோறு, பொரித்த முட்டை சேர்த்து நன்றாக கிண்டி இறக்கினால் முட்டை ப்ரைடு ரைஸ் ரெடி.
AMMAS உணவகம் சுவிஸ்.
0767737777 - குமார்