கொழும்பில் சட்டவிரோதமாக விநியோகிக்கப்படும் மருந்துகள்!

#SriLanka #Colombo
Dhushanthini K
12 hours ago
கொழும்பில் சட்டவிரோதமாக விநியோகிக்கப்படும் மருந்துகள்!

கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலைக்கு முன்பாகவும், நாடு முழுவதிலும் சட்டவிரோத மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக Magen Ratata அமைப்பின் தலைவர் சஞ்சய மஹவத்த தெரிவித்துள்ளார்.

இந்த மருந்துகள் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தில் (என்எம்ஆர்ஏ) பதிவு செய்யப்படவில்லை என்று அவர் கூறினார்.

பதிவு செய்யப்படாத மருந்துகள் பொதுமக்களைச் சென்றடைவது தவறு என்றும், இதனைத் தடுக்க என்எம்ஆர்ஏ உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட சுமார் 50 வகையான மருந்துகளுக்கு உரிமம் மறுக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பலமுறை கோரிக்கை விடுத்தும், இந்த மருந்துகளை வழங்கும் நிறுவனங்கள் குறித்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை," என்று அவர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!