ஈழத்தமிழர்கள் விடிவு இல்லாது இருக்கின்றார்கள்! தங்கம்மா அப்பாக்குட்டி ஜனனதினதில் ஆறுதிருமுருகன்
வடக்கிலும் கிழக்கிலும் தலைமைத்துவம் என்றால் என்ன பண்பு, பண்பாடு பக்குவம் என்ன என்று தெரியாத நிலையில் இன்றைய தலைமுறை இருக்கின்றது.
இன்றைய தலைமுறைக்கு யார் தலைவர், தலைமை யார், தலைவருக்கு இருக்க வேண்டிய பண்பு என்ன, பண்பாடு என்ன பக்குவம் என்ன என்பதை தெரியாதவர்களாக இருக்கிறார்கள். இதனால் பல துன்பங்களை துயரங்களை அனுபவித்து வருகின்றோம் என சிவபூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் தெரிவித்தார்.
அன்னை, சிவத் தமிழ்ச்செல்வி பண்டிதை கலாநிதி. தங்கம்மா அப்பாக்குட்டி ஜனனதினம் செவ்வாய்க்கிழமை தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் அன்னபூரணி மண்டபத்தில் அதன் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு.திருமுருகன் தலமையில் நடைபெற்றது.
இதன்போது உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார் . அவர் மேலும் உரையாற்றுகையில், இன்றைய சூழலில் விமர்சனங்கள் பேசுவது வீண்வார்த்தைகள் பேசுவது அதிகரித்துக் கொண்டு செல்கின்றது இதனால் ஈழத்தமிழர்களுக்கு விடிவு இல்லாது இருக்கின்றார்கள் .
வீண்வார்த்தைகள் பேசுபவர்கள் ஒழுங்கான விடையங்களைச் செய்வதற்கு முன்வர வேண்டும் இவ்வாறான விடையங்களை செய்பவர்கள் குறைவாகவே இருக்கின்றார்கள். வீண்வார்த்தை பேசுவதைவிட பயனுள்ள விடையங்களைச் செய்வார்கள் என்றால் சமூகம் பயன்பெறும் சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக் குட்டியின் தூர நோக்கம் தீர்க்க தரிசனம் காரணமாக கோவில், அன்னையின் பிள்ளைகள், பெரும் விருட்சமாக வளர்ந்து சமூகப்பணிகளை ஆற்றி வருகின்றார்கள்.
அன்னையின் பணிகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக அன்னையைப் பற்றிய நூல்கள் அன்னையின் பாடல்கள், சைவ நூல்கள் அச்சிடப்பட்டு வெளியிட்டு வருகின்றனர் நூற்றாண்டு மலரையும் அச்சிட்டு வெளியிட்டுள்ளோம்.
பெற்ற தாய் தகப்பனுக்கு மாடி வீடு கட்டியிருந்தாலும் அவர்கள் இல்லாத போது துவசம் செய்வார்கள் பின்னர் கோவிலில் அர்ச்சணை செய்வர்கள் அதன்பின் மறந்து விடுவார்கள் ஆனால் எங்கள் அன்னைக்கு வருடத்தில் இரண்டு நாட்கள் திருவிழாக்கள் எடுத்து வருகின்றோம்.
ஆனி மாதம் விசாக நட்சத்திரத்தில் குரு பூசை நடைபெறும் ஜனவரி 7 ஆம் திகதி பிறந்தநாள் நடைபெறும் இந்தப் பெருவிழாவில் அழைப்பிதழ்கள் அனுப்பித்தான் வரவேண்டும் என்று இல்லை அனைவருமே இந்த நாளில் வந்து அன்னையின் வழிபாட்டில் பங்கு பற்றி அன்னையை நினைவு கூர்ந்து செல்ல வேண்டும்.
கடந்த 15 வருடங்களாக பிறந்தநாள் விழா, குருபூசை ,கோவில் திருவிழா, மகளிர் தினம், சிவபூமி அறக்கட்டளை நிகழ்வு போன்றவற்றுக்கு தலைமை தாங்கி நான் நடாத்தி வருகின்றேன். அம்மாவின் வளிப்படுத்தல்,நெறிப்படுத்தல் காரணமாகத்தான் இத்தகைய செயற்பாடுகளை நான் செய்து வருகின்றேன் என்னைப்போல் பலரை அம்மா உருவாக்கியுள்ளார்.
அன்னையின் நிழலில் வாழுகின்ற பிள்ளைகள் கல்வி கற்று பட்டதாரிகளாக்கி ஆலயச் சூழலில் வீடுகளை கட்டி வழங்கியுள்ளோம். அன்னையின் தீர்க்க தரிசனத்தால் கோவில்கள் சமூகப் பணிகளை ஆற்றி வருகின்றது அன்னையின் பெயரில் பல நிதியங்களை உருவாக்கி வைத்தியசாலைகள், பாடசாலைகள் உதவிகள் செய்து வருவதோடு பசியோடு வருபவர்களுக்கு உணவுகளை வழங்கி வருகின்றது.
பல சத்திரங்கள் மடங்கள் இருந்த நிலையில் இன்று அவை கொத்துரெட்டிக் கடைகளாக மாறியுள்ளது பல மடங்கள் குறிப்பாக அன்னை சத்திர மடம் கடையம்மா மடம் கந்தர் மடம் இன்று இல்லாது போயுள்ளது.
எத்தனையே சிறந்த தலைமைத்துவங்களைக் கொண்ட வடக்கு கிழக்கில் இன்றைய தலைமுறைக்கு தலைமைத்துவம் என்றால் என்ன தலைமைத்துவத்திற்கு இருக்கவேண்டிய பண்பு பண்பாடு பக்குவம் தெரியாத நிலையில் இருக்கின்றார்கள் இந்த நிலையில்தான் துன்பங்கள் துயரங்களை நாங்கள் அனுபவித்து வருகின்றோம் என்றார்.