மல்லித்தூள் அரைக்கும் பாரம்பரிய முறை!

#SriLanka #Cooking
Dhushanthini K
9 hours ago
மல்லித்தூள் அரைக்கும் பாரம்பரிய முறை!

மல்லித்தூள் அரைக்க தேவையான பொருட்கள் 

 மல்லி விதைகள் – ஒரு கிலோ 

சீரகம் – 100 கிராம்

 கறிவேப்பிலை – ஆறு கைப்பிடி 

சமையல் எண்ணெய் – ஒரு ஸ்பூன் 

மல்லித்தூள் அரைக்கும் முறை

மல்லித்தூள் அரைக்க ஒரு பெரிய அடிகனமான இரும்பு வாணலி ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு ஒரு கிலோ தனியா விதைகளை சேர்த்து குறைந்த அளவில் தீயை வைத்துக் கொண்டு ஒரு நிமிடம் லேசாக வாசம் வர வறுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கிலோ தனியாவை அப்படியே போட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக மூன்று முறையாகப் பிரித்து வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் சேர்ப்பதால் தனியாவின் பச்சை வாசம் நன்கு நீங்கிவிடும். 

நீண்ட நாட்கள் உபயோகிக்க முடியாது என்றெல்லாம் யோசிக்க வேண்டாம், ஆறு மாதங்கள் வரை பூச்சி, புழுக்கள் வராமல் பிரஷ்ஷாக இருக்கும். எல்லா விதைகளையும் அரைத்து எடுத்த பின்பு சீரகத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு கிலோ தனியாவுக்கு, 100 கிராம் சீரகத்தை சேர்த்து ஒரு நிமிடம் வாசம் வர வறுத்து எடுக்க வேண்டும். அடுப்பை கூட்டி வைத்தால் பொருட்கள் கருகிவிடும், எனவே குறைந்த தீயில் வைத்து தான் எல்லாவற்றையும் வறுக்க வேண்டும்.

கடைசியாக ஆறு கைப்பிடி அளவிற்கு நல்ல பிரஷ்ஷான கருவேப்பிலை இலைகளை கழுவி சுத்தம் செய்து பேன் காற்றில் ஆற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதையும் நிறம் மாற, மொறு மொறு என்று ஆகும் வரை குறைந்த தீயில் வைத்து லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். இந்த எல்லா பொருட்களையும் வறுத்து வைத்த பின்பு, நன்கு ஆற வைத்து, மெஷினில் கொடுத்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். 

அவ்வளவுதாங்க, ரொம்ப ரொம்ப சுலபமாக பிரஷ்ஷான மல்லித்தூள் பாரம்பரியமான முறையில் இப்படித்தான் தயார் செய்ய வேண்டும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!