சுற்றுச் சூழலுக்கு பாதிப்பற்ற உள்ளுர் தயாரிப்புகளை மேம்படுத்த முயற்சி!
அடுத்த இரண்டு ஆண்டுகளில், பசுமை எரிசக்தி கருத்தை அடிப்படையாகக் கொண்டு, உள்ளூர் அடையாளத்தைப் பாதுகாத்து உற்பத்தி செய்யப்படும் பல சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளை அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
மருதானையில் உள்ள VEGA இன்னோவேஷன்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி செயல்முறையை ஆய்வு செய்ய சென்றிருந்தபோது அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் பிரபலமடையும். இதற்கு தடைகளை நீக்க கொள்கை முடிவுகளை எடுக்க அரசாங்கம் தயங்காது எனத் தெரிவித்துள்ளார்.
நிகழ்வில் பேசிய VEGA இன்னோவேஷன்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஹர்ஷா சுபாசிங்க, 2030 ஆம் ஆண்டுக்குள் AI தொழில்நுட்பத்திற்கான சந்தை 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று கூறினார்.
இலங்கையில் இந்த AI தொழில்நுட்பத்தை பிரபலப்படுத்துவதன் மூலம், அந்த சந்தையில் 1%, அதாவது 150 பில்லியன் டாலர்களைப் பெறும் நோக்கம் கொண்டதாக இருக்க முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுதொடர்பான மேலதிக தகவல்களை அறிவதற்கு இந்த இணைப்பினை கிளிக் செய்யவும்