உள்ளுராட்சி தேர்தல் : 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் இரத்து!

#SriLanka #Election
Dhushanthini K
5 hours ago
உள்ளுராட்சி தேர்தல் : 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் இரத்து!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்டிருந்த 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் இரத்துச் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த 2023ஆம் ஆண்டின் மார்ச் மாதம் நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், கடந்த அரசாங்கத்தினால் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

 இந்நிலையில், முன்னைய வேட்பு மனுக்களை இரத்துச் செய்தும், புதிதாக வேட்பு மனுக்களைக் கோரும் வகையிலும் தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 அத்துடன், நாடெங்கிலும் உள்ள 320 உள்ளூராட்சி மன்றங்களின் 8711 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக, எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள்ளாக தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுதொடர்பான மேலதிக தகவல்களை அறிவதற்கு இந்த இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!