மோட்டார் சைக்கிள்களைத் திருடி குற்றக்கும்பலுக்கு விநிகயோகித்த நபர் கைது!
மோட்டார் சைக்கிள்களைத் திருடி, குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு வழங்கும் நபரை களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் கைது செய்துள்ளது.
அவரை இன்று (12.01) களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவின் பன்விலஹேன வட்ட பகுதியில் நேற்று (11) சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர் காலி, கிதுலம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர், அவர் "காலே கடா" என்ற புனைப்பெயரில் அழைக்கப்படுகிறார்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டபோது அவரிடம் இருந்து நான்கு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டன.
காலி, அஹுங்கல்ல மற்றும் களுத்துறை பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டன, மேலும் இரண்டு கூடுதல் இலக்கத் தகடுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
சந்தேக நபரிடம் மேலும் நடத்திய விசாரணையில், அவர் மோட்டார் சைக்கிள்களைத் திருடி குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு வழங்கியது தெரியவந்தது.
இந்த சந்தேக நபர் மீது தாக்குதல்கள், ஹெராயின் கடத்தல் மற்றும் திருட்டு ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக தீவு முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.