04 புதிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றனர்!
#SriLanka
#HighCourt
Dhushanthini K
3 weeks ago
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று (12.01) பதவியேற்றனர்.
அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ஆர்.எம்.எஸ். ராஜகருணா, மேனகா விஜேசுந்தர, சம்பத் பி. அபேகோன் மற்றும் எம்.எஸ்.கே.பி. விஜேரத்ன ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் புதிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவியேற்றனர்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமநாயக்கவும் கலந்து கொண்டார்.