யாழ். வடமராட்சியில் கரையொதுங்கிய மிதக்கும் மர்ம வீடு!
#SriLanka
Mayoorikka
11 months ago
யாழ்ப்பாணம் வடமராட்சி நாகர்கோவில் பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் மர்ம வீடு ஒன்று கரை ஒதுங்கி உள்ளது.
அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்களினால் கடல் சீற்றங்கள் புயல் நிலநடுக்கம் போன்றவை பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்டது.

மியான்மார், தாய்வான், தாய்லாந்து, மலேசியா, இந்தியா போன்ற ஏதாவது ஒரு நாட்டில் இருந்து இவ்வாறான பொருட்கள் கடலில் மிதந்து வந்திருக்கலாமென நம்பப்படுகிறது.
குறித்த வீட்டில் பௌத்த சமயத்தினை பிரதிபலிக்கும் பல மரபு அம்சங்கள் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


மேலதிக செய்திகளை அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்