களுபோவில பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கு அருகில் துப்பாக்கி பிரயோகம்!
#SriLanka
#GunShoot
Thamilini
11 months ago
இலங்கை - கொஹுவல பொலிஸ் பிரிவின் களுபோவில பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கு அருகில் இன்று (16) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் கார் உதிரி பாகங்கள் விற்பனை நிலையம் ஒன்றை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கொஹுவல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.சம்பவம் குறித்த விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.