சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்த ஜனாதிபதி!
#SriLanka
#China
Thamilini
11 months ago
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
தனக்கும் இலங்கை தூதுக்குழுவிற்கும் வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கு சீன அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், இலங்கைக்கு வருகை தருமாறு சீனத் தலைவருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் நான்கு நாள் சீன விஜயம் குறித்த கூட்டு அறிக்கையில், பல துறை நடைமுறை ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகளை முன்னெடுப்பது குறித்து விரிவான பொதுவான புரிதல்கள் எட்டப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.