முட்டைகோஸ் வடை செய்முறை!

#SriLanka
Dhushanthini K
2 months ago
முட்டைகோஸ் வடை செய்முறை!

முட்டைகோஸ் வடை செய்ய தேவையான பொருட்கள் :

 முட்டைக்கோஸ் – அரை கப்

 வெங்காயம் – அரை கப் 

பச்சை மிளகாய் – ஒன்று

 சீரகம் – ஒரு ஸ்பூன் 

பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன் 

உப்பு – தேவையான அளவு 

மல்லித்தழை – சிறிதளவு 

கடலை மாவு – நான்கு டேபிள்ஸ்பூன் 

சமையல் எண்ணெய் – தேவையான அளவு

முட்டைகோஸ் வடை செய்முறை விளக்கம் : 

முட்டைக்கோஸ் வடை செய்ய தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வையுங்கள். அரை கைப்பிடி அளவிற்கு மல்லி தழையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வையுங்கள். அரை கப் வரும் அளவிற்கு முட்டைகோஸை மெல்லியதாக துருவி வைத்துக் கொள்ளுங்கள். 

இப்போது ஒரு மிக்ஸிங் பௌல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் துருவிய முட்டைகோஸ், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். பின் இவற்றுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு சீரகம், தேவையான அளவிற்கு கொஞ்சம் போல பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் நறுக்கி வைத்துள்ள மல்லி தழைகளையும் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள்.

இந்த கலவையுடன் இப்பொழுது நான்கு டேபிள் ஸ்பூன் அளவிற்கு கடலை மாவு சேர்த்து, தண்ணீர் எதுவும் சேர்க்காமல் பிசைந்து கொள்ள வேண்டும்.  வெங்காயத்தில் இருக்கும் ஈரப்பதமே நீர் விட ஆரம்பிக்கும். கெட்டியாக உருண்டை பிடிக்கும் அளவிற்கு ஒருசேர பிசைந்து வையுங்கள். 

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு அடி கனமான வாணலி ஒன்றை வையுங்கள். அதில் வடை சுடும் அளவிற்கு தேவையான எண்ணெய் விட்டு காய விடுங்கள். இதையும் படிக்கலாமே: பித்தளை பொருட்கள் பளபளக்க எண்ணெய் நன்கு காய்ந்ததும் மாவை ஒவ்வொன்றாக வடை போல தட்டி போடுங்கள். மிதமான தீயில் இருபுறமும் நன்கு பொன்னிறமாக சிவந்து வந்ததும், அப்படியே எடுத்து சுடச் சுட டீ அல்லது காபியுடன் பரிமாற வேண்டியது தான். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!